ஆடிப்பூரம் இன்று..!
ஆடி மாதம் என்றாலே இந்து மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான மாதம் தான்.ஆடி மாதம் முழுவதும் அன்னை அம்பிகையை வழிப்பட்டு சகல செல்வங்களையும பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மாதமாகும்.
இன்றைய தினம் ஆடிபூரம் ஆகும் .ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று தான் அம்பிகையும் ,ஆண்டாளும் அவதரித்த தினமாக வெகுசிறப்பாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.ஆகவே தான் ஆடிப்பூரம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது ஆலயங்களில்.
கன்னிப்பெண்கள் மனதிற்கு பிடித்த கணவர் கிடைக்க வேண்டியும்,குழந்தை செல்வம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் கிட்ட வேண்டியும் ஆடி பூரத்தன்று அம்பிகையை வழிப்பட்டு ,அம்பிகைக்கு படைத்த வலையல் என்பவற்றை அணிந்து கொள்வதன் மூலம் அம்பிகையின் அருளால் சுபிட்சமான வாழ்க்கை கிட்டும் என்பது ஐதீகம்.
இலங்கை ,இந்தியா,நேபாளம் என இந்துக்கள் வாழும் நாடுகளில் இந்த ஆடிப்பூரமானது. மிக சிறப்பாக செய்யப்படுகிறது.
அன்னைக்கு மஞ்சள் காப்பு,சந்தன காப்பு,குங்கும காப்பு என்பன மிக சிறப்பாக நடத்தப்படுகின்றன.ஆடி பூரத்தன்று அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று கண்ணாடி வளையல்கள் வாங்கி கொடுப்பது மிகவும் புண்ணியம் என்று குறிப்பிடப்படுகிறது.