தப்பிச் சென்றவர் மீண்டும் கைது..!

நேற்றைய தினம் ஒரு யுவதியும் அவளது குழந்தையும் காணாமல் சென்று , தேடப்பட்ட வேளையில் சடலங்களாக மீட்கப்பட் சம்பவத்தை பதிவிட்டிருந்தேன்.

நேற்றைய தினம் பாணந்துறை சட்ட வைத்திய சாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர அடங்கிய அதிகாரிகள் குழு சடலங்கள் இருந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதே வேளை ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ்காவலில் வைக்கப்பட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உயிரிழ்ந்த வாசனா என்ற பெண்ணின் கணவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணையின் போது வீட்டின் குளிர் சாதனப்பெட்டி ,கதவு,தரை பகுதிகளில் இரத்தக்கறை படிந்திருந்ததை பொலிஸார் அவதானித்திருந்தனர்.

இதே வேளை தனது சகோதரியின். கணவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் குறிப்பிட்டிருந்தார் .

இதன் பிரகாரம் முனனால் இராணுவ வீரரான அந்த நபர் பொலிஸ்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.இதனிடையே விசாரணைக்காக பயன்படுத்தப்பட்ட மோப்ப நாயான ‘புருனோ’ சந்தேக நபரின் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்றமையால் பொலிஸாரின் சந்தேகம் அதிகரித்திருந்தமை குறிப்பிடதக்கது.

இதே வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 20ம் திகதி விடுவிக்கப்பட்ட நபர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றிருக்கிறார்.
இதே வேளை நேற்று அவரது வீட்டிற்கு வந்து சென்றதாக அவரது மனைவி குறிப்பிட்டிருக்கிறார்.

இதே வேளை உயிரிழந்த பெண் காணாமல் போன தினம் சிசிடிவி கெமராவில் சந்தேக நபர் சந்தேகத்திற்கு இடமான ஒன்றை முச்சக்கர வண்டியில் எடுத்து செல்வது போன்று பதிவாகி இருந்தமை குறிப்பிடதக்கது.

இவ்வாறான நிலையில் தான் வரகொட பகுதியில் இருக்கும் வீடொன்றில் பதுங்கி இருந்த வேளை பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதே வேளை காட்டில் கண்டு எடுக்கப்பட்ட சடலங்கள் மிருகங்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இந்த சம்பவம் ஒவ்வொரு இதயத்திலும் கண்ணீரை வரவழைக்கிறது. மனிதருக்கும் மிருகத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று தான் எண்ண தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *