இது இந்தியாவில் இல்லை..!

எழுதுவது கவிஞர் கேலோமி

விவசாயத்தின்
பரிணாமம்
முன்னேற்றம்
உயிர்களை
உயிர்வாழிகளை
முற்றிலும்
தொலைத்து
இயந்திரமயமானது.


செயற்கை
நஞ்சு
மருந்துகளின்
வேகத்தில்
தன்
இயல்புதன்மை
இயற்கைதன்மை
தொலைத்தது.


ஓய்வு
என்பது
இல்லாமல்
நிலமகள்
ஒன்றை
கோடியாக்கி
தர
தரகர்களும்
கார்பரேட்
விஞ்ஞானிகளின்
உயிர்கொல்லி
கலைகள்.


வான்மகளை
தவிர
இங்கு
நீருக்கு
யாரும்
கொடையாளி
இல்லை.
தாகத்துக்கு
தண்ணீர்
தர
இயலாத
வக்கற்ற
அரசியல்.


சுயநல
மக்கள்.
பங்கீடு
என்பது
இந்தியாவில்
இல்லை.
உலக
மனிதாபிமானத்தின்
எல்லையில்
கூட
இங்கு
யாரும்
இல்லை.


இங்கு
வேற்றுமையில்
ஒற்றுமை
என்று
பெருமைபட
ஏதும்
இல்லை.
மழை
பொலிக.
உயிர்வளம்
பெருக
பிராத்தனை
மட்டுமே!


அதுவும்
மதம்
கடந்து.
மனிதம்
உணர்ந்து.
பாவம்
சாகும்
வரை
இங்கு
உணவு
உண்ண
தான்
வேண்டும்.


பணத்தை
பொன்னை
அல்ல.
இங்கு
பிணம்
தின்னி
பெண்
தின்னி
அரசியலில்
விவசாயம்
தப்பி
பிழைக்கட்டும்.


கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *