நடன போட்டியில் இரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி முதலிடம்..!

அகில இலங்கை நடன போட்டி -2023க் காண, மாகாண மட்ட போட்டிகள் கண்டியில் அமைந்திருக்கும் வாரிய பொல ஶ்ரீ சுமங்கல தேரர் கல்லூரியில் நேற்றைய தினம் நடைப்பெற்றது.

இதன் போது இரஜவெல்ல இந்து தேசிய கல்லூரியின் சார்பாக பங்கு பற்றிய தரம் 13 ல் கல்வி பயிலும் தர்ஷிகா தனி நடன நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்றுள்ளார்.இதே வேளை குழு நடன போட்டியிலும் இந்து தேசிய கல்லூரி முதல் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

இதே வேளை அகில இலங்கை கர்நாடக இசைப்போட்டி -2023 காண மாகண மட்ட போட்டியில் தனி இசை நிகழ்ச்சியில் செல்வி.மிருஸ்திகா(அடதாள வர்ணம்)செல்வி .விதுர்ஷி (கீர்த்தனை கற்பனாஸ்வரம்)ஆகிய இரு மாணவிகளும் முதலிடம் பெற்றுள்ளனர்.

இரஜவெல்ல இந்து கல்லூரியானது கலை , கலாச்சாரம் , போட்டிகள் என பலவிதமான நிகழ்வுகளில் முன்னிலைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *