இஸ்ரேலை நீக்கிய நிறுவனங்கள்..!
சீனாவில் பிரபல்யமான பைடு மற்றும் அலிபாபா நிறுவனங்களின் இணைய வரைபடத்தில் இஸ்ரேல் பெயரை நீக்கியுள்ளன.
பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடையே கடுமையான மோதல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் சீன நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேச நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள்,
குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து அலிபாபா மற்றும் பைடு நிறுவனங்களின் தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பாலஸ்தீன போரில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காத சீனா, பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அளிப்பதே தீர்வு எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.