இலங்கை இந்திய அணிகள் மோதல்..!

2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான,போட்டியானது ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வங்கடே மைதானத்தில் நடைப்பெறவுள்ளது.

இறுதியாக கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இவ்விரு நாடுகளும் வங்கடே மைதானத்தில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை எந்த போட்டிகளிலும் தோற்காத இந்திய அணியுடன் இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியானது இதுவரை விளையாடிய 06 போட்டிகளில் 02 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *