இஸ்ரேல் பாலஸ்தீன போர் செங்கடலிலும் எதிரொலித்தது..!
நோர்வேயை சேர்ந்த ஸ்வான் அட்லாண்டிக் மறறும் பனாமாவை சேர்ந்த எம்எஸ்சி கிளாரா ஆகிய கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை நடாத்திவரும் வேளையில் ,பல நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன.
இந்நிலையிலேயே இந்த போரில் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களை இணைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக செங்கடல் பகுதியில் வரக்கூடிய இஸ்ரேலிய கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்படும் கப்பல் என்பனவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் தான் ஆளில்லா விமானங்கள் மூலம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் பயணித்த இரண்டு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
குறித்த கப்பல்களுடன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்பை மேற்கொண்டுள்ளனர்.எனினும் குறிப்பிட்ட கப்பல்களில் இருந்து எவரும் பதிலளிக்கவில்லை,இதனையடுத்தே குறித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக ஹவுத்தி செய்தி தொடர்பாளர் யஹ்யா சரேயா தெரிவித்துள்ளார்.