ஹவுதி அமைப்பின் தாக்குதலை முறியடித்ததாக பென்டகன் தெரிவிப்பு..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடுமையான முறையில் தாக்குதல் நடாத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு சார்பாக மேற்குலக நாடுகள் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு சில நாடுகளும் ,சில அமைப்புகளும் தங்களது ஆதரவினை வழங்கிவருகின்றன.
இந்நிலையில் ஏமனை தலைமையிடமாக கொண்ட ஹவுதி அமைப்பினர் செங்கடலின் மூலம் இஸ்ரேலுக்கு பயணிக்கும் கப்பல்களை தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் செங்கடல் பகுதில் இஸ்ரேல் நோக்கி வந்த கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்,இதனை முறியடிக்கும் வகையில் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் ரொக்கட் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
எனினும் குறிப்பிட்ட சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.