குறைந்த நிறையில் பாண் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!
குறைந்த நிறையில் பாண் விற்பனை செய்த மற்றும் உற்பத்தி செய்த நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நேற்று மற்றும் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக நுர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
பாண் இறாத்தலின் விலை மற்றும் நிறையை காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்கி நுகர்வோர் விவகார அதிகாரசபையால்,
வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கமைய நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, பேக்கரிகள், வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதுடன் பாணின் நிறையை உரிய முறையில் பேணாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.