மன ரீதியான ஒற்றுமை..!

திருமணம் …
காலகாலமாக
நடந்து வரும்
வாழ்வின் ஒப்பந்தம்
மட்டுமே … இதில்
மன ரீதியான ஒற்றுமை
இருக்கிறதோ ? இல்லையோ ?


மருத்துவ ரீதியான
நலம் இருக்கிறது …
ஆனால் இதில் ஆணுக்கெனத்
தனித்த உரிமை என
ஒன்று கிடையாது … காரணம்
இந்த வரம்புகள் எல்லாம்
பெண்களுக்கு மட்டுமே
என ஆண் இனம் நினைக்கிற
ஒன்று தான் …


இதற்காகவே மாகாவி
பாரதி சொன்னான் …
கற்பு நிலை என ஒன்று
வந்தால் …அதை
இருவருக்கும் பொதுவில்
வைப்போம் என்றான் …
ஆனால் காதல் என வரும் போது
ஒருவர் மீது ஒருவர் ஏற்கனவே
உடல் கலப்பும் மனதளவில்
நடந்து முடிந்து விடுகிறது …


ஆனால் அதை இந்தச் சமூகம்
ஜாதி , மதம் , இனம் ,
பொருளாதாரம் எனப் பார்த்து
அவர்களைப் பிரித்து
வேறொருவருடன் இணைத்து
வைக்கும் போதே அங்கே
கற்பு நெறி தவறி விடுகிறது …
இதையே மகாத்மா காந்தி
அவர்களும் …பல மகான்களும்
உள்ளத்தில் ஒரு எண்ணம்
தோன்றிய போதே அதை
வெளிப்படையாகச் செய்யாவிடினும்
உள்ளத்தளவில் அது ஒரு
நடந்து விட்ட செயலே ஆகும் …

ஆக
மனத்தளவில் ஏற்பட்ட ஆளமான
காதலை நமது தமிழ் இனம்
ஏற்றுக் கொள்வதே நல்லது …மற்றபடி பிரிந்து வாழ்வதே மனதளவில் தற்கொலைக்குச் சமம் தான் … 🙏❤️🙏

கே.பி.எஸ்‌ . ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *