அருள் மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவத்தின் பஞ்சரத பவனி இன்று…!

அருள் மிகு மாத்தளை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மாசிமகோட்சவத்தின் பஞ்ச ரத பவனி இன்று.

மத்திய மலைநாட்டில் மாத்தளை மாநகரில் இருந்து அருள் வழங்கும் அன்னை அம்பிகையின் அருளை பெற்றிட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர்.

இலங்கையில் காணப்படும் பிரதான ஆலயங்களில் ஒன்றாகவும் தொண்மையான ஆலயங்களில் ஒன்றாகவும் மாத்தளை ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தின் இராஜ கோபுரம் 108 அடி உயரமுடையது.கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழா 21 நாட்கள் சிறப்பாக பூஜைகள் நடைப்பெற்று பிள்ளையார்,முருகன்,சிவன்,அம்மன்,சண்டேஸ்வரர் ஆகியோர்கள் இரத பவனியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இங்கு தமிழர்கள் மாத்திரம் மன்றி சிங்களவர்களும் ஒன்றிணைந்து வழிப்படும் ஒரு தலமாக இந்த ஆலயம் காணப்படுவது மிக சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *