காசா சுரங்க பாதையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது இஸ்ரேல்..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது கடந்த ஆண்டு முதல் போர் தொடுத்து வருகிறது.
இதன் காரணமாக பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் உணவு,நீர்,மருந்து ,மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இடைநிறுத்தியது.
இந்நிலையில் ஹமாஸ் போராளிகள் இருக்கும் சுரங்க வழி தொடர்பை கைப்பற்றி அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் ,பாடசாலைகள்,மருத்துவமனைகள்,அரச கட்டிடங்கள்,பல்கலைகழகங்கள் ஆகியவற்றிற்கு கீழாக இந்த சுரங்க பாதையினை அமைத்து குறிப்பிட்ட சுரங்கத்தில் வசித்து வந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவில் அமைந்துள்ள மருத்துவமனை, பல்கலைகழகத்திற்கு அடியில் 10 கி.மீ நீளத்திற்கு இந்த சுரங்க பாதையை இஸ்ரேல் கண்டு பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் போராளிகள் இராணுவ நடவடிக்கைக்காக குறிப்பிட்ட சுரங்க பாதையை அமைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஹமாஸ் போராளிகளை அழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேலிய பிரதமர் குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.