ஜப்பானில் நிலநடுக்கம்..!
ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.தென் சீன கடலில் ஒசுமி தீபகற்பத்தில் 40 கி.மீ ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 10.25 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.இதன் காரணமாக மியசாகி மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் கட்டிடங்கள் இலேசாக அதிர்ந்தன.
எனினும் இந்நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.