புனித நோன்பு பெருநாள் இன்று..!
ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலை பிறை நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று 09 ம் திகதி செவ்வாய் கிழமைமாலை தென்பட்டமையினால் இன்று புதன் கிழமை 10 ம் திகதி நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார விவகார திணைக்களம் ஆகியன இணைந்து அறிவித்தன.
புனித ஷவ்வால் மாத தலை பிறையினை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்த தலை பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனை அடுத்து அனைத்து முஸ்லிம் மக்களும் இன்றைய தினம் நோன்பு பெருநாளை சிறபாக கொண்டாடி வருகின்றனர்.
நோன்பு பெருநாளை முன்னிட்டு பல பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகையும் இடம்பெற்றது.
இதே வேளை இந்தியாவில் ஒரு சாரார் இன்றைய தினம் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்,ஒரு சிலர் நாளைய தினம் பெருநாளை கொண்ட தீர்மானித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.