ஈபிள் கோபுரத்தில் கயிற்றால் ஏறிய பெண்ணின் சாதனை(வீடியோ இணைப்பு )
உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பிரான்ஸ் பாரீஸ் நகரத்தில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் ஏறிய பிரெஞ்ச் தடகள வீராங்கனை சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இங்கே வீடியோவை காண்க👇
பிரான்ஸின் மெய்வல்லுனர் வீராங்கணையான Anouk Garnier ஈபீள் கோபுரத்தில் வெறும் கயிற்றின் உதவியுடன் தொங்கியபடி ஏறி புதிய இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
கயிறுகொண்டு ஏறியதில் ஏற்கனவே இருந்த சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
110 மீற்றர் உயரத்தை Anouk வெறும் 18 நிமிடங்களில் பூர்த்தி செய்து உச்சம் தொட்டுள்ள சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.