திரவ நைட்ரஜன்கலந்த உணவுகளால் ஆபத்து..!
திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளை பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டாம் எனவும்,
இதனால் கண் பார்வை குன்றுதல் உள்ளிட்ட பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக சிறுவர்கள் மற்றும் இளையோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற விடயமாக திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் காணப்படுகின்றன.
குறித்த உணவுகளை உட்கொண்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதில் சிறுவர்கள், இளையோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த சிறுவனொருவன் ஸ்மோக் பிஸ்கட்டை உட்கொண்ட சில நிமிடங்களிலேய,
மயக்கமடைந்த வீடியோவொன்று இணையத்தில் பரவலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து சிறுவர்களுக்கு திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருள்களைக் கொடுக்க வேண்டாம் எனவும்,
உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் கலந்த உணவுகளை விற்கக் கூடாது எனவும் இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
அத்துடன் திரவ நைட்ரஜன் கலந்த உணவுகளை உண்பதால் கண் பார்வை மற்றும் பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும்,
உயிரிழப்புகள் நேரலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.