ஓய்வின் முடிவை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்கள் | ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கொலின் மன்ரோ
இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னணி அதிரடி ஆடடக்காரர்களில் ஒருவரான கொலின் மன்ரோ ஆகியோர் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜுலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். குறித்த போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ்மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
2002 அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான அண்டர்சன் தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் சிம்பாவேக்கு எதிராக விளையாடியிருந்தார். மொத்தமாக இதுவரை 187 போட்டிகளில் விளையாடியிருக்கும் அண்டர்சன் 700 விக்கெட்டுக்களை வீழ்த்திய பெருமையுடன் விடைபெற இருக்கிறார். அத்துடன் 32 தடவைகள் 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய பெருமைக்குரிய வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தனது நிறைவுப்போட்டியில் அவர் இன்னும் 8 விக்கெட்டுக்களை எடுப்பாரேயானால் முன்னணி பந்துவீச்சாளரான ஷேன்வோனின் சாதனையை முறியடித்த பெருமையுடன் விடைபெறும் வாய்ப்பு கிட்டும்.
இது நடக்குமா என்ற எதிர்பார்ப்பை உலகமெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தவண்ணம் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல நியூசிலாந்தின் முன்னணி அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கொலின் மன்னரோ சர்வதேசப்போட்டிகளில் இருந்து விடைபெறுவதான அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது.
நியூசிலாந்து அணியின் T20 க்கான உலகக்கிண்ண அணி அறிவிக்கப்படடதன் பின்னர் அவரின் ஒய்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அணியில் விளையாடும் வாய்ப்பை எதிர்பாத்திருந்ததை வெளிப்படையில் ஏற்றுக்கொண்ட அவர், அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பற்ற நிலையில் இப்போது ஓய்வை அறிவிப்பது சரியானது அந்த நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொலின் மன்ரோ நியூசிலாந்து அணியின் 2016 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது மட்டுமல்லாமல் , இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் நியூசிலாந்து அணியிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது