டெங்கு பரவும் நிலை..!
தென்மேற்று பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில்,
டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக,
தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தற்போது டெங்கு பரவல் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.