இந்த கேள்விக்கான விடை உங்களுக்கு தெரியுமா…?

🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍 *அப்படி ஒன்றும்* *அழகில்லை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍

என்னவளே …..!
நீ என்ன
தோகைப் பெற்று வந்த
பெண் மயிலோ ?
இல்லை……..
இனிய குரல்
கற்று வந்த
பெண் குயிலோ ?

பிடாரி மயிர் பெற்ற
நடக்கும்
பெண் சிங்கமோ ?
இல்லை….
செந்நிற கொண்டைப் பெற்று
சிலிர்த்தெழும்
பெட்டைக்கோழியோ ?

மாடத்தில் வாழாமல்
மனையில் வாழும்
மாடப்புறாவோ ?
இல்லை …….
விண்ணிலே
தவழ்ந்த செல்லாமல்
மண்ணிலே நடந்து வரும்
மஞ்சள் நிலாவோ ?

அணிகலன்கள்
அணிந்து வந்த
அர்த்தமுள்ள கவிதையோ ?
இல்லை……
ஆடைகளில் தீட்டி எடுத்த
அழகிய சித்திரமோ ?

மாமல்லபுரத்தை
மறந்து வந்த
பெண் சிலையோ ?
இல்லை ……
எல்லைத் தாண்டி
எழுந்து வந்த
பெரிய அலையோ ?

கரம் பெற்று
தழுவிச் செல்லும்
தென்றல் காற்றோ ?
இல்லை …..
விரல் பெற்று வருடிச் செல்லும் வயல்வெளி நாற்றோ ?

உன்னால்
கேள்விகள் பிறந்தது இன்று
உன்னாலேயே
விடை கிடைப்பது என்று ? *கவிதை ரசிகன்*

🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *