இந்திய வட மாநிலங்களில் பரிசோதனை செய்வதில்லை…!

எழுதுபவர்-கவிஞர் கேலோமி

ரயில்
பயணத்தில்
நடந்த
விடயம்.


எனது
தம்பி
மனோவுடன்
சேத்துபட்டில்
டிக்கெட்
எடுத்து
தாம்பரம்
வரை
பயணம்.


இரண்டு
டிக்கெட்
எடுத்த
பின்
வந்த
இரயிலில்
தம்பி
ஓடி
போய்
ஏறினான்.
அவனை
துரத்தி
நானும்
ரயிலில்
ஏறி
விட்டேன்.


உள்ளே
உட்கார்ந்த
இருவர்
அலட்சியமாக
பார்த்தனர்.
நுங்கம்பாக்கம்
தாண்டி
மாம்பலம்
வந்தது.
டிக்கெட்
பரிசோதகர்
வந்தார்.
இரண்டு
டிக்கெட்களை
கொடுத்தேன்.


இது
முதல்வகுப்பு
இரண்டாம்
வகுப்பு
டிக்கெட்
எடுத்து
எப்படி
நீங்கள்
இவற்றில்
அமரலாம்
என
பறங்கிமலை
ஸ்டேஷனில்
இருவரையும்
இறங்க
செய்து
எங்கள்
பையை
பிடுங்கி
கொண்டு
ஸ்டேசன்மாஸ்டர்
அறைக்கு
அழைத்து
சென்று
விசாரனை
நடத்தினர்.


சார்
தம்பி
பத்து
வயது
சிறுவன்
ஓடி
ஏறி
விட்டான்.
முதல்வகுப்பு
என
எனக்கு
தெரியாது.
நான்
ஒன்பதாம்
வகுப்பு
படித்து
கொண்டிருக்கின்றேன்
என்றேன்.
சின்ன
பசங்களை
விட்டுவிடுங்கள்
என்று
அந்த
அறையில்
உள்ளவர்கள்
சொல்லியும்
கேட்காமல்
இரண்டு
பேருக்கு
அபராத
தொகை
எழுபத்திரண்டு
ரூபாய்
1984ம்
ஆண்டிலேயே
பைன்
போட்டார்.


வாட்ச்
மோதிரம்
போட்டு
இருக்கின்றாய்.
வசதியான
குடும்பத்து
பையன்
என்று
பாக்கெட்டில்
இருந்து
150
ரூபாயில்
அபராத
தொகை
போக
மிச்சம்
கொடுத்தார்.


இனி
நீங்கள்
முதல் வகுப்பிலேயே!
செல்லலாம்
என்றார்.
மனது
ஏதோ
செய்ய
கூடாததை
செய்தது
போல்
அவமானப்பட்டது.
தம்பி
சிரித்து
கொண்டே
வந்தான்.


என்ன
நடக்கிறது
என்று
எப்படி
அவன்
அறிவான்?
ஆனால்
முதல்வகுப்பு
டிக்கெட்
வாங்கியும்
இரண்டாம்
வகுப்பு
அறையிலேயே!
அடுத்த
இரயில்
ஏறி
தாம்பரம்
சென்றோம்.


வயதான
பின்னர்
இந்தியா
முழுக்க
இரயிலில்
பயணித்து இருக்கின்றேன்.
தமிழ்நாடு
ஆந்திரா
கர்நாடகா
இவைகளில்
வீராவேசம்
போடும்
டிக்கெட்பரிசோதகர்
மற்ற
இந்திய
வடமாநிலங்களில்
பரிசோதனை
செய்வதில்லை.


பஞ்சாப்
வாரணாசி
ஓரிஸா
போன்ற
இடங்களில்
ரிசர்வேசன்
செய்த
நமது
இருக்கைகளில்
புகை
விட்டு
படுத்துகொண்டு
பயணிக்கும்
வடமாநிலத்தவரை
எழுப்ப
நாதியில்லை.


புரிந்து
கொள்ள
அவர்களுக்கு
மனிதம்
இல்லை.
சிரமப்பட்டு
பயணித்தோம்.
பலவகையான
மனிதர்கள்
உணவு
பழக்கங்கள்.
வடமாநிலத்தவர்
இரண்டு
லிட்டர்
தண்ணீர்
பாட்டிலில்
கறுப்பு
சுண்டல்
ஊறவைத்து
மூன்று
வேலையும்
சுண்டலில்
பச்சைமிளகாய்
வெங்காயம்
உப்பு
என
சாப்பிட்டு
வந்ததை
பார்த்தேன்.


கையில்
பணமில்லை
மூன்று
நாளும்
உணவு
அது
தான்
என்ற
போது
மனது
வலித்தது.
எங்கள்
ஆன்மீக
பயணத்தில்
அந்த
இளைஞர்களுக்கு
மூன்று
வேளையும்
உணவளித்து
மகிழ்ந்தோம்.


இரயில்
பயணம்
ஓர்
இந்திய
அடையாளம்
மட்டுமல்ல.
அந்த
அந்த
மாநிலத்தவர்
ஏறும்
போது
பிற
மாநிலத்தவரை
நையாண்டி
கேலி
செய்யும்
போக்கு
இலை
மறைவு
காயாக
எங்கும்
நீக்கமற.
நிறைய
விடயங்களை
பிற
மொழிகளின்
சிநேகத்தை
மனிதத்தை
விரோதத்தை
அன்பை
சுதந்திரத்தை
இணக்கத்தை
வெறுப்பை
எளிதாக
அறியலாம்.


இரயில்
பயணம்
தேசத்தின்
வேற்றுமையில்
ஒற்றுமை.
சக
மனிதனை
சக
மனிதனாக
நடத்த
ஆராதிக்க
அவருக்கான
முழு
சுதந்திரத்தை
வழங்க
பயணப்பட
வாழ்த்துக்கள்.


எல்லா
வகுப்புகளும்
ஒரே
மாதிரியாக
அமைக்க
ஏழை
பணக்காரன்
என்ற
வித்தியாசம்
இல்லாமல்
அனைவருக்கும்
ஒரே
சவுகரியத்தை
ஏற்பாடு
செய்து
தர
வாழ்த்துக்கள்.


எல்லோரும்
இந்த
நாட்டு
மன்னர்கள்.


கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *