நினைவுகளில் நான்..!
❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥 *உலக நினைவு தினக்* *கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
நினைவு…….
மனச்செடியில்
மலராக முள்ளாக
ஒன்றில் இல்லை
‘ஒன்றிலேயே’ இருக்கிறது…. !
இதனைப் பகுத்தால்
நீரும்
நெருப்பும் கிடைக்கும்….!
இது ஒரு பாற்கடல்
அமுதம் விஷம்
இரண்டும் இருக்கும்…. !
பலருக்கு
‘சான்றிதழை’ தந்தது
சிலருக்கு
‘சாலை ஓரத்தைத்’ தந்தது…..
‘புன்னகையாக’ மட்டுமல்ல
‘கண்ணீராகவும்’ இருக்கிறது….!
பல நினைவுகளை
‘புல்’லாக இருக்கும்போதே
பிடுங்கி விட வேண்டும்
‘மரமாக’ விட்டால்
பிடுங்குவது கடினம்….!
சில நினைவுகள்
‘சுமையான’ பிறகும்
சுமந்து கொண்டுள்ளனர்….
‘குப்பையானப்’ பிறகும்
வைத்துக் கொண்டுள்ளனர்…
மனக்கடலில் – இது
கரையில்
அலையாக இருந்தாலும்
ஆழத்தில்
‘முத்தாக’ இருக்கிறது….
மனதில்
நினைவிருக்கா ?
நினைவில்
மனம் இருக்கா ?
சில நினைவுகள்
கவிதையாகி விடுகிறது…..
சில நினைவுகள்
தாடியாகி விடுகிறது…
சில நினைவுகள்
பெயராகி விடுகிறது…
சில நினைவுகள்
பொருளாகி விடுகிறது…
சில நினைவுகள்
கண்ணீராகி விடுகிறது….
சில நினைவுகள்
நினைவாகவே ஆகிவிடுகிறது…!!!
இதனுடைய ஒரு பக்கம்
‘தென்றலால்’ ஆனது
மறுபக்கம்
‘புயலால்’ ஆனது…….
சுமையான நினைவு
அழு வைக்கும்….
சுகமான நினைவு .
சிரிக்க வைக்கும்…..
சுயநினைவு
வாழ வைக்கும்…..
எப்படி ஆயினும்
நினைவில்லாமல்
வாழ்க்கை இல்லை….!!! ♥உலக நினைவு தின வாழ்த்துக்கள்..♥ *கவிதை ரசிகன்*
❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥