குடும்ப விசாவுக்கு £38700 சம்பளம் வேண்டுமா? ஆய்வு நிறைவுக்கு வரும்வரை தற்காலிக நிறுத்தம்.

குடும்ப விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது , பிரித்தானியாவில் ஆக்ககுறைந்தது £38700 சம்பள வருமானமாகப் பெறவேண்டும் என , 2025 ஆண்டிலிருந்து வரவிருந்த விதியை , அதுகுறித்த மறு ஆய்வு நிறைவுக்கு வரும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த இந்த அறிவிப்பை புதிய ஆட்சியில் பதவியேற்ற உள்துறை செயலாளர் Yvette Cooper, அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆகக்குறைந்தளவு வருட வருமானமாக  £29000 ஆக உயர்த்தப்பட்டதை, வரும் 2025இல் £38 700 ஆக உயர்த்தப்படும் என முன்னைய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இருப்பினும் புலம்பெயர்வின் ஆலோசனைக் குழுவின் (migration advisory committee ) குடும்ப விசாக் கொள்கைகளை  மதிப்பாய்வுக்கு  அனுமதித்து அதன் தாக்கங்களை ஆராய  இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே உயர்த்தப்பட்ட வருட வருமானக் கொள்கையால் பலரும் தங்கள் குடும்பங்களுடன் இணையமுடியாமல் பாதிப்புக்கு உட்பட்டு வரும் நிலையில் மேலும் அதிகரிக்க எடுக்கு முடிவு, பலரையும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் தற்காலிக இந்த நிறுத்தம் பலருக்கும் தங்கள் குடும்பங்களுடன் இணையும் வாய்ப்பை அதிகரிக்க சந்தர்ப்பம் அதிகமாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் பிரித்தானியாவுக்கு வரும் தொழிலாளர்களின் திறனை மதித்து ,  அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களை  பிரித்தானியாவுக்கு அழைத்து வருவதற்கான உரிமையை வழங்குவதோடு,குடும்ப வாழ்க்கை என்ற தன்மையை மதிப்பதும் , நாட்டின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதுமான  சமரிலையை பேணமுடியும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *