ஆளுமையின் மகோன்னதம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா?
பெருவுடையாரும் பேரரசனும்
சிறப்பின் சின்னமாகச் சொக்கனுக்குக் கல்லம்பலம்!
சதுரப் போதிகைகள் சாற்றுவதோ கலாச்சாரம்!
தோடம்பழத்தின் சுளைகளாய் கோத்த விமானம்!
ஆடல்வல்லானாய் சிற்பங்கள் ஆடுகின்ற நடனம்!
தஞ்சையிலே தமிழுணர்வின் தெய்வீகக் கருவூலம்!
பெருவுடையாரின் பிரசித்தியோ பேரின்பத்தின் உச்சம்!
அழகும் பிரம்மாண்டமும் கலைநயத்தோடே மிளிரும்!
சோழனின் பராம்பரியமோ ஆளுமையின் மகோன்னதம்!
கல்லம்பலம் = கற்கோயில்
போதிகை = தூணின் பகுதி
தோடம்பழம் = ஆரஞ்சுப்பழம்
வாய்ப்பளித்தமைக்கு நன்றி!
நெஞ்சார்ந்த வணக்கங்களுடன்,
கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.