உங்கள் வீட்டில் தென்னை வளர்க்கிறீர்களா?

🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥 *தேங்காய் தினம்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥

தேங்காய்_தினம்

ஏய் …!
தென்னையே!
உப்பு நீர் விட்டாலும்
உன்னால் மட்டும்
எப்படி இனிப்பான
இளநீரை கொடுக்க முடிகிறது…?

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்”
என்ற திருக்குறளை
நாங்கள் இரண்டு
மதிப்பெண்ணுக்காக
மனப்பாடம் செய்தோம்….
நீயோ வாழ்க்கைக்காக வாசித்திருக்கிறாய்….

மூவுலகத்தில் தேடினாலும் கிடைக்காத காய்
உன்னில் இருக்கும்
இந்தத் தேங்காய்….. !!!

அழுத குழந்தைக்கு
அன்னை பால்
தேய்ந்த உடம்புக்கு
தேங்காய் பால்…..

பாகுபாடு பார்க்காமல்
எல்லா காய்களுடன்
பழகும்
உன் உயர்ந்த மனம்
எங்களிடம் இல்லையே….

மாரியம்மன்
மாவிளக்கு தட்டிலும் நீதான்….
திருமணத்தின்
நிச்சய தட்டிலும் நீதான்….
இறைவனின்
படையல் தட்டிலும் நீதான்…..
ஏனென்று யோசித்தபோது?
வெளியில் எப்படி இருந்தாலும்
உள்ளுக்குள்
தூய்மையாக இருப்பதே
சிறந்த வாழ்க்கை என்ற
தத்துவத்தை
வெளிப்படுத்துவதால் தான்….

உடைக்கின்றவர்களுக்கு
எல்லாமே
தண்டனை தான் கிடைக்கும்
உன்னிடம் தான்
இனிய நீர் கிடைக்கும்…..

பருப்புக்கும் உனக்கும்
அப்படி என்ன சண்டை
இருவரும்
சேர்வதே இல்லை…

பூசணிக்காயும் நீயும்
பள்ளி பருவத்தில்
அப்படி என்ன தவறு செய்தீர்கள்? திருஷ்டி சுத்தி
உடைக்க வேண்டும் என்று
எந்த முனிவரால்
இந்த சாபம் சபிக்கப்பட்டது…?

பெற்ற பிள்ளைகள்
காப்பாற்றாமல் போனாலும்
நட்ட தென்னம்பிள்ளையான நீ தவறாமல்
காப்பாற்றி விடுகிறாய்…..

தலை முடி விழும்போது
தாங்கிப் பிடிப்பதும்
எலும்புகள்
பலவீனமடையும் போது
தன்னம்பிக்கை ஊட்டுவதும்
ஆண்மையை குறையும் போது
உற்பத்தியை பெருக்குவதும்
தேங்காயின்
தனித்தன்மையாகும்…. *கவிதை ரசிகன்*

🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *