தன்னுரிமையும் தனியரசும் நூல் லண்டனில் வெளியாகிறது
கந்தசாமி பிரதீபன் எழுதிய தன்னுரிமையும் தனியரசும் என்ற நூல் வெளியீடு இந்த வாரவிடுமுறை நாளில் லண்டனில் வெளியாகவுள்ளது.
வரும் செப்டெம்பர் மாதம் 29 ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று லண்டன் Modern இல் அமைந்துள்ள Hill House St Helier மண்டபத்தில் குறித்த நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.
விடுதலையை நேசிக்கும் சுவாசிக்கும் ஒவ்வொருவரும் கடடாயமாக வாசிக்க வேண்டிய நூல் என குறிப்பிடப்படும் இந்த நூல், எழுத்தாளர் அவர்களின் நீண்ட ஆய்வுகளின் நிறைவில் எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த உலகில் வாழும் தேசிய இனங்களின் பிறப்புரிமையான தன்னுரிமை ஏற்பளிப்பின் முக்கியத்துவத்தையும் , தன்னுரிமை நிராகரிக்கப்படட தேசிய இனங்கள் தனியரசை அமைப்பதற்கான தார்மீக நியாயங்களையும் சுட்டிக்காட்டி, தத்துவக் கோட்ப்பாடுகளினூடாக எழுதப்பட்ட படைப்பாக எழுத்தாளர் இந்த நூல் பற்றி தனது ஆரம்பக்குறிப்பில் வெளிப்படுத்துகிறார். தமிழ் மக்களின் நியாயமான நீண்டகால கோரிக்கைகைகளை பறைசாற்றும் விதமாக அமையப்பெறும் இந்த நூல் பலரது எதிர்பார்ப்பையும் இது தொட்டிருக்கிறது.
சுதந்திர வேட்கை வெளியீட்டகத்தின் வெளியீடாக வரும் இந்த நூல், எமது மக்களின் விடுதலை வாழ்க்கைக்கான சுயநிர்ணயத்தின் நியாயத்தன்மைகளை எதிர்கால தலைமுறையினருக்கு மீண்டும் எடுத்துச் சொல்லி, இது ஒரு மிகப்பெறுமதியான நூலாவணமாக பதிவிடப்படும் என்று நம்பலாம்.
முதற்தடவையாக லண்டனில் வெளியாகும் இந்த நூல் , எதிர்காலத்தில் தமிழ் மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் வெளியாகும் என்றும் அறியவருகிறது.
மாலை 04 30 க்கு தொடங்கும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனைவரையும் வருகை தருமாறு நூல் வெளியீட்டுக்கு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.