இங்கிலாந்து சௌத்தென்ட்டில் நடைபெறும் விளையாட்டு விழா

இங்கிலாந்து சௌத்தென்டில் தொடர்ந்து 10வது வருடமாக வருடாந்த விளையாட்டு விழா இந்தமாதம் இடம்பெறவுள்ளது.

வெற்றிநடை நாட்காட்டி

கோலாகலமாக சௌத்தென்ட் மற்றும் அதனை சூழவுள்ள நகர மக்களெல்லாம் பங்குபெறும் இந்த விளையாட்டு விழா வரும் ஜூன்மாதம் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த விளையாட்டு நிகழ்வு சௌத்தென்ட் தமிழ்ச்சங்கம் அங்கு வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைத்துக் கொண்டாடும் வருடாந்த நிகழ்வாக ஒழுங்கு செய்கிறது.

நண்பகல் 12 மணியிக்கு துவங்கும் இந்த நிகழ்வு மாலை நேரம் கடந்து கொண்டாட்டமாக அமையும்.

சிறுவர்களுக்கான தடகள போட்டிகளும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் மிகச்சிறப்பாக ஒழுங்கு செய்யப்படும்.

வயது வரம்பின்றிய திறந்த போட்டிகள் வரும் அனைவரும் மைதானத்தில் பங்குபற்றி சிறப்பிக்கக்கூடிய சிறந்த நிகழ்வாக இது அமையும்.

மைதானத்தில் கலாசார நிகழ்வுகளும் ஜனரஞ்சக நிகழ்வுகளும் இடம்பெறுவது பார்வையாளர்கள் அனைவருக்கும் மகிழ்வுப்பொழுதாக இந்தநாள் விளங்கும்.

போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் சரியான நேரத்துக்கு தொடங்கும் என்பதால் அனைவரையும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நேரத்துக்கே மைதானத்துக்கு வந்துவிடுமாறு நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனுக்கு வெளிப்புற நகரங்களில் வாழும் தாயகமக்களால் ஒழுங்கு செய்யப்படும் மிகக் கோலாகல நிகழ்வு இதுவென சௌத்தென்ட் தமிழ்ச்சங்க விளையாட்டு விழா குறிப்பிடப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எழுதுவது : யோதிகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *