இன்றைய தலைமுறை..!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *இன்றைய* *தலைமுறை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இன்றைய
தலைமுறையினருக்கு
கலையாத
தலையை சிவிசிவி
கண்ணாடி பார்க்க
நேரம் இருக்கு…..
கலைந்து கிடக்கும்
எண்ணங்களை
சரி செய்வதற்கு நேரமில்லை…
முகம் தெரியாத
முகவரி தெரியாதவர்களை
சாப்பிட்டாயா ?
சாப்பிட்டாயா ?என்று கேட்க
நேரம் இருக்கிறது…
முகம் கொடுத்த
பெற்றோர்களை
முகவரி கொடுத்த
உற்றோர்களை
ஒரு வார்த்தை கேட்க
நேரமில்லை…..
“இரண்டு
ஜிபி நெட்டை “
பயன்படுத்தி விட்டோம் என்று
மகிழ்ச்சி அடைகின்றனர்
“24 மணி நேரம் “
வீணாகப் போனதற்கு
வருத்தப்பட யாருமில்லை….
வாழ்க்கையைக் “கெடுக்குய்”
பேஸ்புக் படிக்க
விரும்புகின்றனர்….
வாழ்க்கையைக் “கொடுக்கும்”
கல்லூரி புக் படிக்கத்தான்
விரும்புவதில்லை…
உடனிருப்போர் சொல்லும்
“அழிவுரைகளைக்” கேட்பதற்கு
பொறுமையிருக்கிறது
உயிர் கொடுத்தோர் சொல்லும் “அறிவுரைகளைக்”
கேட்பதற்குத்தான்
பொறுமையில்லை……
அன்றைய தலைமுறைகள்
“கேட்டு” திருந்தியது
இன்றைய தலைமுறைகள்
“பட்டும்” திருந்தவில்லை…. *கவிதை ரசிகன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥