மின்சார வினியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது…!
நாட்டில் திடீரென மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் ,மின்சார விநியோகத்தை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இலங்கை மின்சார சபை
பாணந்துறை மின்சார உப நிலையத்தில் மின்கம்பி மீது குரங்கு விழுந்ததால் நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
மாலை வேளையில் தேசிய மின் கட்டமைப்பு மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பல பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதே வேளை
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடைக்கான காரணங்களை கண்டறிய விசாரணை நடத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.