அர்ச்சுனா MP யின் நடத்தை தொடர்பாக ஆய்வு அறிக்கைசபாநாயகரால் சபையில் சமர்ப்பிப்பு

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நேற்று முன்னதினம் (21) சபையில் சபையில் அறிவித்தார். குழுக்களின் பிரதித் தவிசாளரான ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இக் குழுவில் உள்ளடங்குவதாகவும் சபாநாயர் அறிவித்தார்.
அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.