கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் ஹெலபதுகம, கல்னேவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார்.
மேற்படி விசாரணையின் போது, இந்த நபர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.
சடலம் அனுராதபுரம் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்னேவ பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.