கிழக்கு மாகாண ஆளுனருக்கு பகீரங்க மடல் – இரா.துரைரெத்தினம்

வாகனங்கள் செல்ல முடியாத பழுதடைந்த வீதிகளை திருத்தி அமைக்குமாறு கோரல்
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒரு சில வீதிகளைத் தவிர அனைத்து வீதிகளிலும் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகளும், தனியார் பேரூந்துகளும், ஏனைய மோட்டார் வாகனங்களும் போக்கு வரத்து செய்யும் வீதிகளாகும். கீழ் குறிப்பிடப்படும் வீதிகள் (R.D.A) (R.D.D) போன்றவற்றுக்கும், பிரதேச சபைக்கும் உரியதாகும்.
பல வருடகாலமாக இவ் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாததால் இலங்கை போக்குவரத்து சபையினர் பேரூந்துச்சேவை நடாத்த முடியாமல் கஸ்ரப்படுகின்றார்கள். குறிப்பாக, மழை காலங்களில் பேரூந்துச் சேவை செய்ய முடியாமல் பல சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
குறிப்பிட்ட சிலர் மோட்டார் சைக்கில்களில் போக்குவரத்து செய்கின்றவர்கள் மட்டும் தேவையை பூர்த்தி செய்கின்றனர். ஏனையோர் பல துன்ப துயரங்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, வைத்தியசாலைக்குக் கூட உரிய நேரங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் துன்பப்படுகின்றனர்.
இவ்வீதிகள் மிகவும் கஸ்ரப்பிரதேசத்தில் உள்ளதோடு இங்கிருந்து குறைந்தது 25K.M தூரம் நகரப்புறத்திற்கு செல்ல வேண்டும். இது தொடர்பாக சம்மந்தப்பட்டோர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கதாகும்.
வீதிகள் விபரம்
பாவற்கொடிச்சேனை பாடசாலையடி இருந்து சிப்பிமடு வரையும்,(R.D.D) தாண்டியடி வீதியில் முண்டாளமடு வீதியிலிருந்து வண்டரமூலையடி வரையும் (பிரதேசசபை), உன்னிச்சை 8ம் கட்டையிலிருந்து தாந்தாமலைவரையும் (R.D.D),வாழைக்காளை இருந்து கச்சைக்கொடி சுவாமிமலை வரை(பிரதேசசபை),கரவெட்டி இருந்து மகிழவெட்டுவான் வரையும் (R.D.D),பன்சேனை பாடசாலை இருந்து கண்டியனாறு (பிரதேசபை),காந்திநகர் இருந்து பன்சேனை எல்லைவரையும் (பிரதேசசபை)