பிரதி அமைச்சரின் உரையால் பிரதமர் அதிருப்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்த கருத்தை அனுமதிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நேற்று நடந்த விடயம் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

“அது பொருத்தமில்லை. நான் அப்போது அங்கு இல்லை. ஆனால் அந்த நொடியிலேயே அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அதனை உடனடியாக நிராகரித்தார். அதனை சரிசெய்ய அவர் முன்னிலையானார்”

“எமது அரசாங்கம் எம் பக்கம் தவறு செய்திருந்தாலும், அதை மாற்ற நாங்கள் தலையிடுவோம். இதுபோன்ற விடயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நடக்கக்கூடாதவை சிலசமயம் நமக்கு நடக்கலாம்.”

“அவர் எங்களில் ஒருவர் என்பதால், அவர் செய்ததை சரி என்று நாங்கள் சொல்ல முயற்சி செய்ய மாட்டோம். நேற்று நடந்தது நடக்காமல் இருந்திருந்தால் நல்லது.”

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை இலக்கு வைத்து பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே நேற்று பாராளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *