போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காணியை விற்பனை செய்த வயோதிப பெண் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மற்றொரு நபருக்குச் சொந்தமான காணியை 50 மில்லியன் ரூபாவிற்கு விற்பணை செய்த 83 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றப் புலனாய்வுத் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி வீதியில் உள்ள காணியை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் 2021 ஆம் ஆண்டு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் பிரிவின் வணிக மோசடிப் பிரிவினர் அறிக்கையொன்றை சமர்பித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில் போதே, சந்தேகநபர் பத்தரமுல்லையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.