மன்னாரில் 31 கி.கி கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது

மன்னாரில் 31 கி.கி கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது பெறுமதி சுமார் ரூ. 12 மில்லியன் என மதிப்பீடு
இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், மரிச்சக்கட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், 31 கி.கி இற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த, பரண நிறுவனங்களும் அத்துடன் மன்னார் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவுடன் இணைந்து நேற்று (02) இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்று சோதனையிடப்பட்டது. அங்கு, அந்த வீட்டின் 14 பொதிகளில் பொதிச்செய்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 31 கிலோ 62 கிராம் கேரள கஞ்சா கையிருப்புடன் சந்தேகநபர் ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் கைது செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு சுமார் ரூ.12 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது, மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 47 வயதுடைய சவேரியபுரம், சிலாவத்துறை, மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கேரள கஞ்சா, மோட்டார் சைக்கில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.


