மூலப்பிரதிகளோடு தாக்கல் செய்த வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்க நீதிமன்ற உத்தரவு
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களை உள்ளடக்கிய வேட்புமனுக்களை மீண்டும் ஏற்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முந்தைய நிலையில், சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (02) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் போது, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் நீதிபதி கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் இணக்கம் எட்டப்பட்டதை அடுத்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.