இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்டம்-2025

இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பணித்துறையை நோக்கிய செயற்திட்ட செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் ஆலோசனையின் கீழ் மேலதிக அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ்(04.04.2025) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

இச் செயலமர்வின் வளவாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் கலந்து கொண்டார்.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். ஊழல் பற்றி இலங்கையின் சட்ட ரீதியான பொருள் கோடல் தொடர்பான விளக்கங்கள், 2023 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

அத்துடன் ஊழலின் பல்வேறுபட்ட வடிவங்கள் மற்றும் ஊழலின் வகைகள், சட்டத்திற்கெதிரான கையூட்டல் பணிக்கொடை, கமிசன் பெற்றுக் கொள்ளல், ஊழலின் தாக்கங்கள், முறையற்ற பாரபட்சம், ஊழலைத்தடுக்கும் சட்ட திட்டங்கள் மேலும் நடைமுறைசார் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விடய ஆய்வுகள் மூலம் உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *