எல்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெலிகஸ்ஹேன பாடசாலைக்கு பின்னாலுள்ள வீடொன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வந்த சிலரே இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.