ஒரு ஓவர் பந்து வீச இது தான் காரணம்..!
ஐ.பி.எல் தொடரில் நேற்று முன்தின போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின இதன் போது பஞ்சாப் அணியின் முக்கிய பந்து வீச்சாளர் ஒரு ஓவர் மாத்திரமே பந்து வீசினார்.
இதற்கான காரணத்தை பஞ்சாப் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.” வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஷிவம் துபே சற்று சிரமப்படுவார்.அதனால் தான் நான் தொடர்ச்சியாக வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினேன் .துபே இருக்கும் போது சுழற்பந்து வீச்சாளரை அழைக்க வேண்டாமென எனக்கு தோன்றியது.துபே ஆட்டமிழந்ததும் தோனி வந்ததால்,அவருக்கு எதிராக யுஸ்வேந்திர சாஹலை கொண்டு வந்தேன். ” என்று தெரிவித்துள்ளார்.
