பதிவுகள்

இசைக்கு ஓர் கவிதை..!

🎼🎻🎼🎻🎼🎻🎼🎻🎼🎻🎼

இசைக்கு ஒரு கவிதைபடைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🎼🎻🎼🎻🎼🎻🎼🎻🎼🎻🎼

இசை
மன காயங்களுக்கு
ஒரு மருந்து…..!

வாடிய ஆன்மாவின் மீது
தெளிக்கப்படும் தண்ணீர்……!

தனிமையை
இனிமையாக்கும்
காதலன் காதலி……

இதில் தான் ஆன்மா
அவ்வப்போது ஊஞ்சலாடுகிறது…..

தூக்கம் வராமல்
தவிப்போரை
தன் மடியில்
தலை சாய்க்க வைத்து
தாலாட்டி
தூங்க வைக்கும்
ஒர் அன்னை…..

எல்லா பொருள்களும்
அணுக்களால் ஆக்கப்பட்டது என்று
சொன்ன அறிவியல்
ஏனோ….!
இசையினாலும்
ஆக்கப்பட்டுள்ளது என்று
சொல்ல மறுத்துவிட்டது…. !

இசை தீபத்தை
உயிரில்
ஏற்றி வைக்கப்படும் போது
அது மெழுகாய்
உருகியே விடுகிறது…..!

இசை
இல்லாமல் போயிருந்தால்
மனம்
மறுத்துப்போயிருக்கும்….
இதயம்
இறுகிப்போயிருக்கும்….

ஆசைக்கு
அடிமையாகாத .
மனிதன் இருக்கலாம்
ஆனால்
இசைக்கு அடிமையாகாத
மனிதனே! இல்லை….

இதை
ரசிக்கத் தெரிந்தவர்களின்
வாழ்க்கைக்கு
மகிழ்வை கொடுக்கும்
வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு
வாழ்க்கையையே ! கொடுக்கும்…….
_
இது யாரையும்
அடிமைப்படுத்துவது இல்லை….
இதனிடம் தான்
எல்லோரும்
அடிமையாகி விடுகின்றனர்…..

கவலைகளை மறக்க
மது அருந்துகிறார்கள்
மடையர்கள்
இசையை அருந்திப் பாருங்கள்..
கவலையை அல்ல
உன்னையே
மறந்து விடுவீர்கள்….

மனக் காயங்களை மட்டுமல்ல
மனித வயிற்றுப் பசியைக்கூட
ஆற்றும்
மகத்தான ஒன்று….

இசைப்போர் இசைத்தால்
கல்லுக்கும்
காது முளைக்கும்…..
காற்றுக்கும்
மெய் சிலிர்க்கும்…. *கவிதை ரசிகன்*

🎼🎻🎼🎻🎼🎻🎼🎻🎻🎼🎻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *