பெண்மை இனிதடா
பெண்மை இனிதடா…
பாரிலுள்ளோரே கேளும் பெண்மை இனிதடா//
பூவில் பூவையவள் புயலாவாள் இனியடா//
பாசமுடனவளை பாதுகாத்தல் உந்தன் பணியடா//
பாவைக்கு எப்போதும் ஆடவனே தோணியடா//
இரும்புப் பெண்மணிகள் இப்புவியில் பலரிருக்க//
இதயத்தில் நிலைத்தவர்கள் இகமதில் சிலரிருக்க//
வீரத்தில் செறிந்தவர்கள் விண்வரை சென்றிருக்க//
பெண்மையின் மேன்மையிலே மூவுலகும் வியந்திருக்க//
சோதனைகள் கடந்தே சாதனங்கள் புரிபவள்//
போதனைகளோடு புதிய பாதையினை வகுப்பவள்//
சத்தியங்கள் பேசியே சமரசம் செய்பவள்//
இன்னல்கள் விலக்கியே இமயம் தொட்டவள்//
இன்முகம் காட்டியே துன்பம் கடப்பவள்//
இனிய நற்பண்புடன் நாணியே நடப்பவள்//
அன்பென்றால் அடிமையாய் காலிலே கிடப்பவள்//
அடக்கிடின் விலங்கையே சுக்குநூறாய் உடைப்பவள்//
துன்பமதில் அன்னையைப் போல் பரிவுடன்//
துயர் நீக்கிடுவாள் நேசமதாய் கனிவுடன்//
கற்பொன்றே அணிகலன் என்ற நினைப்புடன்//
கவரி மான்போலே இருக்கிறாள் துடிப்புடன்//
எழுதுவது : கவிஞர் .ஜே.ஜே.
யாழ்ப்பாணம்