தெணியான் உலகை விட்டுப் பிரிந்தார்
ஈழத்தின் புகழ்பெற்ற தமிழ் இலக்கியகர்த்தா “தெணியான்” என்ற புனைபெயரில் மக்கள் இடம்பிடித்த எழுத்தாளர் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார்.
யாழ்ப்பாணம் , பொலிகண்டி எனும் பிரதேசத்தில் தெணி எனும் ஊரைச்சேர்ந்த தெணியான் அவர்கள் கந்தையா நடேசன் எனும் இயற்பெயரைக் கொண்டவராவார்.
84 வது வயதில் இவ்வுலகு விட்டு நீங்கிய தெணியான் அவர்கள் ஈழத்து இலக்கிய உலகிற்கு 1964 ம் ஆண்டில் பிணைப்பு எனும் சிறுகதையின் மூலம் உலகிற்கு அறிமுகமானார் என்று சொல்லப்படுகிறது.
வடமராட்சி தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஆசிரியராக இருந்த தெணியான் அவர்கள் தனியார் கல்வி நிலையங்கள் ஊடாகவும் பல நன்மாணாக்கர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.
எட்டுக்கும் மேற்பட்ட நாவல்கள் குறுநாவல்கள் வானொலி நாடகங்கள் பல நூறு கட்டுரைகள் விமர்சனங்கள் என ஈழத்து இலக்கியத்துறையின் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாக மிளிர்ந்தவர் திரு. தெணியான் அவர்கள்.
இவரின் தொடர் தமிழிலக்கிய பங்களிப்புக்களுக்காக கலாபூசணம் விருது உட்பட பல சமூக,கல்வியியல் விருதுகளை பெற்றவராக மிளிர்ந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.