கைது செய்யப்பட்ட அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீராங்கனையின் காவல் காலம் நீட்டப்பட்டது.
பெப்ரவரி 17 ம் திகதியன்று மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து பயணிக்க முற்பட்ட அமெரிக்க கூடைப்பந்தாட்ட நட்சத்திரம் பிரிட்னி கிரினர் தனது பயணப்பொதிகளுக்குள் தனது பாவனைக்காகப் போதை மருந்து வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார். அச்சமயம் முதல் காவலில் வைக்கப்பட்ட அவரது காவல் சமயத்தை நீட்டுவதாக ரஷ்ய நீதித்துறை முடிவுசெய்திருக்கிறது.
https://vetrinadai.com/2022/03/19/basketball-star-britteney-griner-arrested-in-russia/
ஏழு தடவைகள் WNBA All-Star ஆகத் தெரிந்தெடுக்கப்பட்ட கிரினர் The Phoenix Mercury, குழுவில் விளையாடி வருபவராகும். கிரினருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்த அவரது குழுவும், அமெரிக்கக் கூடைப்பந்தாட்ட அமைப்பும் சமீபத்தில் அவரை honorary All-Star என்று கௌரவித்திருந்தது.
31 வயதான கிரினர் மீதான வழக்கு அவர் கைது செய்யப்பட்டு 130 நாட்களுக்குப் பின்னர் ஜூலை 01 இல் தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்ட வழக்கின் பின்னர் அவர் மேலும் ஆறு மாத காலம் காவலில் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ரஷ்யா 10 வருடத் தண்டனை விதிக்கும் சாத்தியமுண்டு.
சாள்ஸ் ஜெ. போமன்