ஏழு நாடுகள் எதிர்க்க, 101 நாடுகளின் ஆதரவைப் பெற்று ஐ.நா-வில் உரையாற்றப்போகும் செலென்ஸ்கி.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் அடுத்த வாரம் உக்ரேனின் ஜனாதிபதி வொலொமிடிர் செலென்ஸ்கி உரையாற்றுவார் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அவர் தொலைத்தொடர்பு மூலம் ஐ.நா சபை அங்கத்தவர்களுக்கிடையே தனது உரையையை முன்வைக்க 101 அங்கத்துவ நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எரித்திரியா, பெலாருஸ், கியூபா, ரஷ்யா, சிரியா உட்பட 7 நாடுகள் எதிர்த்து வாக்களித்திருந்தன. ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அமைதியை நேசிக்கும் ஐ.நா-வின் இறையாண்மை கொண்ட நாடுகளின் தலைவர்கள் வெளிநாட்டு படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, இராணுவ விரோதங்கள் காரணமாக பொதுச்சபையில் நேரில் பங்கேற்க முடியாத நிலைமை பற்றிய பிரேரணை ஒன்றைப் பற்றியே உக்ரேன் ஜனாதியின் பதியப்பட்ட உரை விபரிக்கவிருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களாகக் கொவிட் 19 தொற்றுப் பயத்தினால் ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டங்கள் சகல அங்கத்துவர்களும் நேரடியாகப் பங்குபற்றும் நிகழ்ச்சிகளாக இருக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்