லண்டனில் “பயங்கரவாதி”நூல் அறிமுகம்
இலங்கையில் இருந்து பல எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். எமது மண் , மண்வாசனையோடு தமிழும் எழுத்தும் உயிரோடு கலந்து பல படைப்புகள் புலம் பெயர் எழுத்தாளர்களால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் எழுத்தாளர் ,கவிஞர் தீப செல்வனை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள் .ஏன் எனில் “நடுகல்” என்ற ஓர் அற்புத நாவலின் சொந்தக்காரர். அவரின் மற்றோர் பிரமாண்ட நாவலான “பயங்கரவாதி” என்ற புதிய படைப்பானது ஜூன் மாதம் 24ம் திகதி பிரித்தானியாவின் பிரமாண்ட அரங்கான ALPERTON COMMUNITY SCHOOL ல் வெளியிடப்படுகிறது.
இந்நிகழ்வினை திரள் அமைப்பு மற்றும் வணக்கம் இலண்டன் ஆகியன ஏற்பாடு செய்துள்ளன. இந்த நூல் வெளியீட்டு நிகழ்விற்கு கிளி பீப்பிள் அமைப்பு ஆதரவு வழங்கியுள்ள அதேவேளை ,அபியகம் ,முல்லை எக்ஸ்ப்ரஸ்,ராம் றீரையில்ஸ்,ப்ராங்கோ குரூப்,அம்மா ஹோம் கெயார் சேவை,மீற்சி சாறீஸ் போன்ற நிறுவனங்கள் அனுசரனை வழங்குகின்றன.
எழுத்துக்களை வாசிக்கும் எழுத்து பிரியர்களுக்கு இந் நாவலானது ஓர் வரபிரசாதம் ஆகும்.இந் நிகழ்வில் படைப்பாளி கலந்துரையாடல் இரவு உணவு என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.