தமிழ் மொழி பழமை வாய்ந்த மொழி- நரேந்திர மோடி
இலங்கை இந்திய மலேசியா சிங்கபூர் கனடா என பல்வேறு பட்ட நாடுகளில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். கலை கலாச்சாரம் என தமிழ் மொழி மிகவும் பழமையான பெருமை வாய்ந்த மொழியாக காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பின்வருமாறு தமிழ் மொழி பற்றி கருத்து தெவித்திருந்தார்.
“இந்திய அரசின் உதவியுடன் ஹூஷ்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் .தமிழ் இருக்கை நிறுவப்படுவதால் தமிழ் கலாச்சாரம் , உலகின் பழமையான மொழியான தமிழ் மொழி மேலும் வளர்ச்சி பெறும்.உங்கள் அனைவரிடமும் எனது வேண்டு கோள் என்ன வென்றால் மொழி பற்றிய விவாதங்கள் எழும் போதெல்லாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வேண்டும் எங்கள் மொழி தமிழ் மொழி என்று. உலகின் மனிதகுல வரலாற்றில் பழமையான மொழி எங்களிடம் இருக்கிறது என்று பெருமை கொள்வோம்.”என்று.
ஆயிரம் மொழிகள் இருந்தாலும் அன்னை தமிழ் மொழி போல் எம் மொழியும் இல்லை. தேனாய் இனிக்கும் எம் மொழி உலகமெல்லாம் வியாபித்து இருக்கிறது என்பதை எண்ணி பெருமை கொள்வோம்.