வனிந்து ஹசரங்கவின் சாதனை.

கிரிக்கெட் வரலாற்றில் பல வீரர்கள் சாதனைகளை படைத்திருக்கிறார்கள் .படைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். கிரிக்கட் வரலாற்றில் ,மெகா சாதனை படைத்த ஸ்பின்னர் என்ற சாதனையை வனிந்து ஹசரங்க தன் வசமாக்கி கொண்டுள்ளார்.

2023 ஒரு நாள் உலக கோப்பை தகுதி காண் சுற்றுக்கள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.அந்த வகையில் பீ பிரிவில் 15 வது ஆட்டத்தில் இலங்கை அயர்லாந்து அணிகள் மோதின.நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.இதன் போது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5ஓவர்களில் 325/10 ஓட்டங்களை எடுத்தது.

326என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 31ஓவரகளில் 192 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.இதன் மூலம் 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் வனிந்து ஹசரங்க 10 ஓவர்கள் பந்து வீசி 79 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.இதே வேளை ஓமன்,நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராகவும் வனிந்து ஹசரங்க 6/24, 5/13 என விக்கட்டுக்களை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் என்ற சாதனையை தன் வசமாக்கி கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *