சமூக ஊடகம் பயன்படுத்துபவரா நீங்கள்…?
சர்வதேச சமூக ஊடக தினம்
இன்றைய தினம் ஜூன் 30ம் திகதி சர்வதேச சமூக ஊடக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய தலைமுறை சாப்பாடு இல்லாமல் வேண்டுமானாலும் இருந்து விடுவார்கள் ஆனால் சமூக ஊடகம் இல்லாமல் இருக்க முடியாது.
அந்த அளவு சமூக ஊடகமானது இன்றைய தலைமுறையோடு இணைந்துள்ளது.வட்சப்,பேfஸ் புக்,யூடியுப்,இன்ஸ்டகிராம்,டுவிட்டர் என பலவாறாக இன்றைய தலைமுறை தங்களது வாழ்வின ஒரு பகுதியாக இணைத்துக்கொண்டுள்ளார்கள்.
இரவு கண் தூங்க செல்லும் போதும் சரி ,காலை கண்விழிக்கும் போதும் சரி கண்கள் முதலில் ஆரம்பித்து முடிக்கும் ஒரு பக்கம் சமூக ஊடகமாக இருக்கிறது.
இதில் குறிப்பாக ஒன்றை சொல்ல வேண்டும் சமூக ஊடகத்தினை இன்றைய தலைமுறை பயன் படுத்துகிறதா?அல்லது சமூக ஊடகங்கள் இன்றைய தலைமுறையை பயன் படுத்துகிறதா ..? என்ற கேள்வியும் எழுகிறது.ஏன் என்றால் அந்தளவுக்கு இளைஞர் யுவதிகள் ,சதையும் நிகமும் போல சமூக ஊடகங்களுடன் இணைந்திருக்கின்றனர்.
சமூக ஊடகங்களால் பல்வேறுப்பட்ட நன்மைகள் கிடைத்தாலும் அதற்கு சமனான தீமைகளும் கிடைக்கின்றன.இதில் நாம் எவ்வாறு இந்த சமூக ஊடகத்தினை பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் நன்மை தீமைகள் நம்மை வந்து சேர்வதாக அமைகிறது.
இன்றைய வர்த்தக உலகில் சமூக ஊடகமானது வர்த்தக துறையில் மிக முக்கிய இடத்தினை வகிக்கிறது. அனைத்து விதமான நடவடிக்கையையும் சமூக ஊடகத்தை பயன்படுத்தியே செய்கிறார்கள்.அவ்வாறானதொரு காலத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்.
எதிர்காலத்திலும் இந்த சமூக ஊடகமானது பல மாற்றங்களுடனும் புதிய புதிய அம்சங்களுடனும் மக்களை அடிமை படுத்தி வைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.