“கதிர்காமம்” வருடாந்த எசல பெரஹெர இன்று…!
குமரன,முருகன்,ஆறுமுகன்,அழகன் என சிறப்பித்து கூறப்படும் அழகன் முருகனுக்கு பல கோயில்கள் உள்ளன.
அந்த வகையிலும் இலங்கையிலும் முருகனுக்கு பல கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கதிர்காமம் முருகன் ஆலயம். “கதரகம ருஹூணு தேவாலய” என்று சிறப்பித்து சிங்களத்தில் குறிப்பிடப்படும் இவ் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதி “ஹெசல பெரஹெர” இன்று வீதிஉலா வர இருக்கின்றது.இன்று இரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகும் பெரஹெர நாளை காலை மாணிக்க கங்கையில் செய்யப்படும் நீர் வெட்டுடன் இனிதே நிறைவடையும்.
கதிர்காம வருடாந்த உற்சவமானது 19ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது .இதில் பல்வேறு இன,மத பேதமின்றி அனைத்து விதமான மக்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் ஆலயத்தில் தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என ஒருங்கே இணைந்து வழிப்படும் ஆலயமாக திகழ்கின்றமை விசேட அம்சமாகும்.”ருஹூணு ஹெசல பெரஹெர”வில் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற்றிட நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
போயதினம் என்பது அனைத்து சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் விசேட தினமாகும் .இன்றைய தினம் நாடாளாவிய ரீயில் இருக்கும் அனைத்து விகாரைகளிலும் விசேட பூசைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது.