கடற்படை தலைமை தளபதியாக பெண் நியமனம்…!
பெண் என்பது வீட்டை பராபரிப்பவள் மட்டுமல்ல உலகையே பராமரிப்பவள் தான்.சமையல் முதல் சந்திரன் வரை அவள் அதிகாரம் என்றும் நிலைத்திருக்கும்.
ஆனாலும் ஒரு சில இடங்களில் பெண்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அவள் சாதிக்காமல் இருந்ததில்லை.
உலக வல்லரசான அமெரிக்காவில் ஒரு பெண் கடற்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லிசா பிரான் செட்டி என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நியமனம் செய்துள்ளார்.லிசா பிரான செட்டி தற்போது கடற்படை துணை தலைவியாக பணிபுரிந்து வந்த நிலையிலேயே, ஜோபைடனால் கடற்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தின் மூலம் அமெரிக்க வரலாற்றி ஒரு பெண் கடற்படை தலைமை தளபதியாகவும் கூட்டுப்படை தலைவியாகவும் செயற்படும் பெருமை லிசா பிரான் செட்டியை சென்றடைகிறது.
இவரது நியமனத்திற்கு அமெரிக்க செனற்சபையானது முழுமையான ஒப்புதல் வழஙக வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.