சந்திரயான் -03 செயற்பாடு தொடரும்..!
அண்மையில் சந்திரயான்-03 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரனுக்கு அனுப்பியது.
இதனை வெற்றிகரமாக நிலவில் இறக்கப்பட்ட நிலையில் பிரக்யான ரோவர் தனது செயற்பாட்டை ஆரம்பித்தது. இதன் மூலம் நிலவில் இரும்பு ,அலுமினயம்,சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டுப்பிடித்து அனுப்பியது.
இதனிடைய தற்போது நிலவில் இரவுக்காலம் என்பதால் பிரயான் ரோவர் ஆனது தனது செயற்பாட்டை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை செப்டெம்பர் மாதம் 22 ம் திகதி சூறிய ஒளி படும் போது பிரக்யான் ரோவர் தன்னை செயற்படுத்திக்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.இல்லை எனின் இந்தியாவின் தூதராக ரோவர் அங்கு நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.